அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வரும் இந்தியர்களை கை, கால்களில் விலங்குகளுடன் அமெரிக்க விமானத்தில் ஏற்றிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வரும் வெளிநாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகிறார். அவ்வாறாக கொலம்பியா நாட்டை சேர்ந்த பலரை திரும்ப அனுப்பி வைத்த அமெரிக்க ராணுவம், தொடர்ந்து இந்தியர்களையும் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
முதற்கட்டமாக அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட 206 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாபில் கொண்டு வந்து தரையிறக்கியது.
இந்நிலையில் தற்போது இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கை குறித்து அமெரிக்க எல்லை காவல் படைத் தலைவர் மைக்கெல் டபிள்யூ பேங்க்ஸ் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியர்கள் கை, கால்களில் விலங்குகள் பூட்டப்பட்டு அடிமைகள் போல விமானத்திற்கு அழைத்து செல்லப்படும் காட்சி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த பதிவில் மைக்கெல் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதில் அமெரிக்காவின் உறுதியை தங்கள் நடவடிக்கை பறைசாற்றுவதாகவும், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் யாராக இருந்தாலும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கும் தொனியில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Trending
- ஹிக்கடுவையில் துப்பாக்கிசூடு
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் இஸ்லாமிய நாடுகள் சமதான முயற்சி
- பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”