இந்தியாவின் சர்வதேச நாடக விழாவான பாரத் ரங் மஹோத்சவ் இன் வெள்ளிவிழாவைமுன்னிட்டு கொழும்பில் 2025 பிப்ரவரி 6 முதல் 9 வரை இந்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் தேசிய நாடகப் பள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார மையம், இலங்கையின் காட்சி மற்றும் கலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து டவர் ஹால் தியேட்டர்,பனிபாரத தியேட்டர் ஆகியவற்றில் நாடகங்கள் நடைபெறும்.
இது ஜனவரி 28 அன்று தொடங்கியது. இந்தியா, இலங்கை , நேபாளம் ஆகிய நாடுகளின் 13 நகரங்களில் 16 பிப்ரவரி 2025 வரை நடைபெறும்.ரஷ்யா, இத்தாலி, ஜேர்மனி, நார்வே, செக் குடியரசு, நேபாளம், தைவான், ஸ்பெயின் , இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட தனித்துவமான தயாரிப்புகளைக் கொண்டுள்ளது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளி மேலும் தகவலுக்கு, அதிகாரப்பூர்வ NSD/BRM இணையதளங்களைப் பார்வையிடவும்: https://nsd.gov.in/, www.brm.nsd.gov.in. கொழும்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் icc.colombo@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்.
Trending
- வரி ஏய்ப்பு செய்த 12 வாகனங்கள் பறிமுதல்
- பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் இடமாற்றம் இரத்து
- ஆட்டிசம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – டாக்டர் ஹேவமலகே
- தொலைக்காட்சி டிஜிட்டல் மயமாக்கல் ஒப்பந்தத்தில் ஜப்பானுடன் கைச்சாத்து
- உக்ரைனின் உறுப்பினர் தன்மை அமைதி ஒப்பந்தத்தில் இல்லை: நேட்டோ தலைவர்
- இலங்கை வந்தார் இந்தியப் பிரதமர் மோடி
- நடிகர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது
- பூஸ்ஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு