Monday, February 3, 2025 11:05 am
மட்டக்களப்பு பன்சேனை கிராமத்தில் யானைக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் இன்னொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
முதலைக்குடாவைச் சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

