மலேஷியாவில் நடைபெற்ற U19 மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் தென் ஆபிரிக்காவுடன் மோதிய இந்திய இளம் மகளிர் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இரண்டாம் முறையாக உலகக் கிண்ணத்தை சம்பியனானது.
மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில்,நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்க அணி துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. இந்திய மிகளிர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக, மீகே வான் வூர்ஸ்ட் 23 ஓட்டங்களை அடித்தார்.
இந்திய அணியின் தரப்பில் கொங்காடி த்ரிஷா 3 விக்கெட்டுகளையும், பருணிகா சிசோடியா, ஆயுஷி சுக்லா, வைஷ்ணவி ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்
83 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகளான கமாலினியும், கொங்காடி த்ரிஷாவும் களமிறங்கினர். 8ஓட்டங்கள் எடுத்து கமாலினி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சனிகா ச்சல்கே களமிறங்கினார். அவரும் த்ரிஷாவும் இணைந்து அதிரடியாக ஆடி, 11.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டினர். இதையடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, இந்திய மகளிர் அணி இரண்டாவது முறையாக மகளிர் ரி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது.
கொங்காடி த்ரிஷா 33 பந்துகளில் 44ஓட்டங்களும், சனிகா ச்சல்கே 22 பந்துகளில் 26 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 44 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய கொங்காடி த்ரிஷா ஆட்டநாயகியாகவும், தொடரின் நாயகியாவும் தேர்வாகினார்.
Trending
- ஃபெராராவுடன் மீண்டும் இணைந்தார் ஜானிக் சின்னர்
- ஓபரா ஹவுஸுக்கு மெலனியா ட்ரம்பின் பெயரை வைக்க கோரிக்கை
- ஜப்பான் பிரதமர் இஷிபா இராஜினாமா?
- ரணிலின் 2022 அவசரகால பிரகடனம் அரசியலமைப்பிற்கு முரணானது உச்ச நீதிமன்றம்
- இலங்கை இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வாய் புற்றுநோய்
- இலங்கையில் 507 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீடு
- யானைக் கொல்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் – ராகுல தேரர்
- சூரிய கிரகணத்தால் இருளில் மூழ்கும் பூமி