இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், சமூக ஊடகங்களின் பயன்பாடு இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும்கொழும்பு விஜேராமாவில் உள்ள இலங்கை மருத்துவ சங்க கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி எச்சரித்துள்ளார்.
15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இந்த விடயத்தில் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும், இதனால் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுவதாகவும் மருத்துவ நிபுணர் கூறினார்.
வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி மேலும் தெரிவிக்கையில்,
“குறிப்பாக பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி.யைப் பொறுத்தவரை, இளைஞர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.பல இளைஞர்கள் இந்த சமூக ஊடகங்கள் மூலம் கூட்டாளிகளைக் கண்டுபிடிக்கின்றனர்.
சிலர் மது ,போதைப்பொருள் பயன்பாட்டை நாடியுள்ளனர். இது போன்ற காரணங்களால், பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் எச்.ஐ.வி போன்ற வைரஸ்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுகின்றன” என்றார்.
Trending
- உடுத்துறையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
- ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க டொனால்ட் டிரம்பிற்கு கடிதம்
- உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு – விசேட அறிவிப்பு
- கட்டுநாயக்கா- சீதுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு
- இலங்கையின் மக்கள் தொகை 21.76 மில்லியனை எட்டியுள்ளது
- இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது
- முதலாவது AI-இயங்கும் வன்பொருள் சாதனம்வெளியிடப்பட்டது
- சரிவை சந்திக்கிறது போக்கு வரத்துசபை