மது , சிகரெட் பாவனைக்காக நாளொன்றுக்கு 1,210 மில்லியன் ரூபாவை இலங்கையர் செலவளிப்பதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) 2022 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையால் சுகாதாரம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் 237 பில்லியன் ரூபா வருமானம் பதிவாகியுள்ளது. அதேவேளையில் 2022 இல் வரி வருமானம் 165.2 பில்லியன் ரூபாஎன பதிவாகியுள்ளது.
ஆண்டுதோறும் மது அருந்துவதால் 15,000 பேரும், சிகரெட் பாவனையால் 20,000 பேரும் மரணமாகிறார்கள்.
இலங்கையில் தொற்றாத நோய்கள் பரவுவதில் 80% அதிகரிப்பு காணப்படுவதாகவும், இதற்கு மதுபானம் மற்றும் சிகரெட் பாவனையே முக்கிய காரணங்களாகும் என ADIC சுட்டிக்காட்டியுள்ளது.
2023 இல் 20% வரி அதிகரிப்பைத் தொடர்ந்து, மதுவின் நுகர்வு 8.3 மில்லியன் லீற்றர் மதுபானம் குறைந்துள்ளது, அதேவேளை வரி வருவாய் ரூ.11.6 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
சிகரெட் விற்பனை மூலம் வரி வருவாய் 7.7 பில்லியன், சிகரெட் விற்பனை 521.5 மில்லியன் யூனிட்கள் குறைந்துள்ளது என ADIC தெரிவித்துள்ளது.
Trending
- பொம்மைக்குள் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
- செம்மணியில் வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் போராட்டம்
- போலி நாணயத்தாள்களுடன் சீன பிரஜை கைது
- ட்ரம்பின் வரியால் வோக்ஸ்வாகனுக்கு 1.5 பில்லியன்டொலர் இழப்பு
- காஸாவுக்கு உதவ ஜோர்தான் விமானங்கள் தயார்
- அமெரிக்காவில் வெப்பநிலை அதிகரிப்பு
- இலங்கை தொழிலாளிக்காக கண்டனம் தெரிவித்த கொரிய ஜனாதிபதி
- இலங்கையில் அதிகரிக்கிறது சைபர் குற்றம்