சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐசிசி) தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் அலார்டிஸ்(சிஇஓ) தனது பதவியில் இருந்து விலகுவார் என்று ஆளும் குழு செவ்வாய்க்கிழமை அறிக்கையில் அறிவித்தது.
“கடந்த 13 ஆண்டுகளாக ஐசிசி தலைவர், இயக்குநர்கள் குழு , ஒட்டுமொத்த கிரிக்கெட் சமூகம் அளித்த ஆதரவு , ஒத்துழைப்புக்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் பதவி விலகவும், புதிய சவால்களைத் தொடரவும் இதுவே சரியான நேரம் என்று நம்புகிறேன். கிரிக்கெட்டுக்கு உற்சாகமான காலங்கள் காத்திருக்கின்றன என்று நான் நம்புகிறேன், மேலும் ஐசிசி மற்றும் உலகளாவிய கிரிக்கெட் சமூகம் எதிர்காலத்தில் ஒவ்வொரு வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன், ”என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2012 இல் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவில் இருந்து ICC யில் கிரிக்கெட் பொது மேலாளராக சேர்ந்தார். அவர் நவம்பர் 2021 இல் ஐசிசியின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
Trending
- இலங்கை வந்தார் இந்தியப் பிரதமர் மோடி
- நடிகர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது
- பூஸ்ஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு
- ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி
- கட்டுநாயக்காவில் 528 மொபைல்களுடன் ஒருவர் கைது
- செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா
- அமெரிக்காவின் வாகன வரிகளுக்கு சீனாவின் வாகனத் தொழில் சங்கம் எதிர்ப்பு
- இஸ்ரேலிய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 97 பேர் கொலை