கண்டி மாவட்டம், மாவனெல்ல, பேராதெனிய, கெலிஓயா, கம்பளை, உடபுஸ்ஸலாவ, நாவலப்பிட்டி, உலபனே, தென்ன கும்புர, குண்டசாலை, திகன , கடுகன்னாவை உள்ளிட்ட பகுதிகளில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் அரிசி வர்த்தகர்களை தேடி ஐந்து மேலதிக குழுக்கள் நடத்திய சுற்றிவளைப்பில் அதிக விலைக்கு அரிசி விற்ற இரண்டு நிறுவனங்கள் உட்பட 25 வர்த்தகர்கள் மீது அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த சில நாட்களிலும் இன்றும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களால் 6.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறிய நுகர்வோர் விவகார அதிகாரசபை முமேற்கொள்ளும் சுற்றிவளைப்புகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
Trending
- 15 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் – பங்களாதேஷ் வெளியுறவு செயலாளர்கள் கூட்டம்
- ஏபி, ரொய்ட்டர்ஸ், ப்ளூம்பெர்க் உள்ளிட்ட பிரபல ஊடகங்களுக்கு வெள்ளைமாளிகை தடை
- 200 தெலுங்கு ஊழியர்களை வெளியேற்றிய அமெரிக்க நிறுவனம்
- அதி வேக வீதியில் குழந்தை செலுத்திய கார்
- கண்டியில் 49 பாடசாலைகளுக்கு விடுமுறை
- அமெரிக்க வரிகளால் கடுமையாகப் பாதிப்படைந்த சீன சிறு வணிகங்கள்
- மதுபோதையில் வாகனம் செலுத்திய 800 சாரதிகள் மீது வழக்கு
- முதன்முறையாக பெண்கள் குழு விண்வெளிக்கு பயணம்