ரமழான் நோன்பு காலத்திற்காக சவூதி அரேபியாவிலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட பேரீச்சம்பழங்களுக்கும் இலங்கை சுங்கம் வரி விதித்துள்ளதாகத அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியின் போது இந்த விடயம் அம்பலமானது.
ரமழான் நோன்பு காலத்தில் பேரீச்சம்பழங்களுக்கான வரியை அரசாங்கம் தளர்த்தும் என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதன்போது தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே இந்த பேரீச்சம்பழம் கிடைத்ததால் அதற்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தேவையான நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சவுதி அரேபியா நன்கொடையாக வழங்கிய 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களுக்கு இலங்கை சுங்கம் 33 மில்லியன் ரூபாவை வரியாக விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Trending
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு
- 24 மணி நேர கடவுச்சீட்டு சேவை நிறுத்தம்
- ஊழலற்ற மக்களாட்சியை சுயேட்சை குழுவான மாம்பழச் சின்னம் வழங்கும்