இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர் பலராம், உள்ளிட்ட 18 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கர்நாடகா மாநிலம் சதாசிவா நகர் காவல் நிலையத்தில்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போவி பழங்குடியினத்தைச் சேர்ந்த துர்க்ப்பா என்பவர் கொடுத்த புகாரில், “நான் இந்திய அறிவியல் மையத்தின் நீடித்த தொழில்நுட்பப் பிரிவில் பணி புரிந்தேன் கடந்த 2014-ம் ஆண்டு பணியில் இருந்தபோது போலியான பாலியல் வழக்கில் சிக்கவைக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டேன். அப்போது சாதிய ரீதியிலான அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே குற்றச்சாட்டை கோவிந்தன் ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியார், சந்தியா விஸ்வரய்யா, ஹரி கேவிஎஸ் தாசப்பா, பலராம் பி, ஹேமலதா மிஸ்ஸி, சத்தோபத்யாய, பிரதீப் சாவ்கர், மனோகரன் ஆகியோர் மீதும் துர்கப்பா முன்வைத்துள்ளார்.
Trending
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளார்.
- விஜய் உட்பட பலர் மீது வழக்கு தாக்கல்
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு