Thursday, September 3, 2026 10:37 pm
அனைத்து துறைகளும் இருக்கும் வகையில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் அமைக்கப்படும்.
சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் 1200 ரூபாகோடி மதிப்பில் தலைமைச் செயலகம் உருவாக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
‘மாநில அரசின் விரிவடைந்து வரும் நிர்வாகத் தேவையை கருத்தில் கொண்டு புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படவிருக்கிறது. சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகியவை அடங்கிய புதிய கட்டட வளாகம் கட்டப்படும். தீயணைப்பு வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சென்று வர ஏதுவாக வசதிகள் செய்யப்படும்.
பசுமை கட்டட தர நிலைக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகமாக தலைமைச் செயலகம் உருவாக்கப்படும்.400 ஆண்டுகள் ஆண்டுகளாக தமிழகத்தின் நிர்வாக மையமாக ஆட்சி அடையாளமாக ஜார்ஜ் கோட்டை செயல்பட்டு வருகிறது.. ஆனால் 120 ஏக்கர் பரப்பு கொண்ட வளாகத்தில் தலைமை செயலாக பயன்பாட்டுக்கு வெறும் 4 ஏக்கர்கள் மட்டுமே உள்ளது’ என அவர் தெரிவித்தார்.

