Monday, August 10, 2026 11:22 am
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம், இன்று திங்கள்கிழமை காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் அழைக்கப்பட்டிருந்தார். பொலிஸ் மா அதிபர் குறித்து அவர் அண்மையில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
பொலிஸ் மா அதிபருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வகையில் சாகர காரியவசம் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் பாரதூரமானவை என்றும், இது தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பொலிஸ் மா அதிபர் குறித்து தான் தெரிவித்த கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், அவை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் சாகர காரியவசம் விளக்கம் அளித்துள்ளார்.
வழங்கப்பட்டுள்ள அறிவித்தலுக்கு அமைவாக, அவர் இன்று காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியத்தில் முன்னிலையான அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

