Monday, July 13, 2026 12:43 pm
சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அடிப்படை உரிமைகள், பால்நிலை சமத்துவம் தொடர்பிலான முறைப்பாடுகளை கையாளுவது தொடர்பில் பொலிஸாருக்கான செயலமர்வு இன்றைய தினம் (13) திங்கட்கிழமை யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. தமிழ் மொழி மூல பொலிஸாருக்காக தமிழ் மொழியில் குறித்த செயலமர்வு நடைபெற்றது.
குறித்த செயலமர்வில் நிகழ்நிலை ஊடாக பொலிஸ்மா அதிபர், குற்றபுலனாய்வுதுறை பணிப்பாளர் ஆகியோரும் நேரடியாக வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர், சட்ட வைத்திய அதிகாரி, பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் , அரச சட்டவாதிகள் உள்ளிட்டோர் கருத்துரைகள் வழங்கினார்கள்.
வடக்கில் உள்ள தமிழ் மொழி மூல பொலிஸாருக்கு தமிழ் மொழி மூல வளவாளர்கள் ஊடாக குறித்த செயலமர்வு முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது .

