Thursday, July 9, 2026 3:26 pm
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் போது தாக்கப்பட்டதில் உயிரிழந்த நிலக்ஷருவன் திலகசிறி என்பவரின் உடலம் நேற்றைய தினம்(08) மாலை அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
42 வயதான இந்த அதிகாரி, அனுராதபுரம் மாவட்டத்தின் ரம்பேவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பகஹவெவ, பிஹிம்பியகொள்ளேவ என்ற முகவரியைச் சேர்ந்தவராவார்.
குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான இந்த அதிகாரிக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் உள்ளனர். முன்னதாக கடற்படையில் இணைந்து 12 வருடங்கள் சேவையாற்றி அதிலிருந்து விலகிய இவர், பின்னர் சிறைச்சாலை திணைக்களத்தில் சிறைச்சாலை காவலராக (Prison Guard) பணியில் இணைந்து கொண்டார். வெலிகடை, அங்குணுகொலபெலஸ்ஸ, மஹர மற்றும் மட்டக்களப்பு ஆகிய சிறைச்சாலைகளில் சுமார் 5 வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.
இந்நிலையிலேயே, அவசர சேவைத் தேவை நிமித்தம் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்த வேளையில், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு அவர் முகங்கொடுத்துள்ளார். உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரியின் உடலத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அனுராதபுரம் சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரிகளும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

