Thursday, June 11, 2026 12:43 pm
தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் டெல்லியில் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிதி ஆயோக் கவுன்சிலின் 11 ஆவது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் இன்று காலை முதல் மாலை வரை நடைபெறுகிறது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றுள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள உணவகத்தில் அனைவரும் அமர்ந்து சாப்பிடும்போது சிறிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
முதலமைச்சர் விஜய் புறப்பட்ட சில நிமிடங்களில் உணவகத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

