Friday, May 29, 2026 10:00 am
நயினாதீவு கடலில் விழுந்து பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதிபரும் அவருடன் சென்ற ஆசிரியரும் , பயணிகள் படகினை தவறவிட்டமையால் கடற்தொழிலாளி ஒருவரின் சிறு படகில் நயினாதீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளனர் . அதன்போது , சீரற்ற காலநிலையினால் அவர்கள் பயணித்த கடல் பகுதி கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் , படகு கடல் அலையில் சிக்கி படகில் இருந்து அதிபர் நிலை தடுமாறி கடலில் விழுந்துள்ளார்.
அதனை அடுத்து , உடனடியாக செயற்பட்ட படகோட்டி அதிபரை மீட்க முற்பட்ட போதிலும் , அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

