Monday, May 25, 2026 11:27 am
வடமராட்சி மந்திகை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கலானது இன்று திங்கட்கிழமை (25) காப்பு எடுத்து வருதலுடன் ஆரம்பமாகின்றது.
இதனைத்தொடர்ந்து எதிர்வரும் 29ம் திகதி மணமாலை படிப்பும், 01ம் திகதி சிலம்பு கூறல் படலமும், விளக்கெரிப்பும் இடம்பெற்று 02ம் திகதி பொங்கல் மற்றும் காவடி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
வருடந்தோறும் இடம்பெறும் வைகாசிப்பொங்கல் உற்சவத்திற்கு முதற் திங்கட்கிழமை புலோலி தெற்கு ஒல்லை வீரபத்திரர் ஆலயத்தில் இருந்து விசேட பூசை வழிபாட்டுடன் மேள தாளம் முழங்க கோவலனார் கதை ஏடு எடுத்து செல்லப்பட்டு எட்டு நாட்கள் தொடர்ந்து பாராயணம் செய்யப்பட்டு ஒன்பதாம் நாள் வழந்து வைத்தலுடன் பொங்கல் ஆரம்பமாகி அடியார்களால் கரகாட்டம் எடுக்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

