Saturday, May 23, 2026 8:40 am
தென்மேற்குப் பருவமழை தீவில் படிப்படியாக வலுப்பெற்று வருகிறது. மேற்கு, சபரகமுவ வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி , நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேற்கு , சபரகமுவ மாகாணங்களிலும், காலி , மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.அனுராதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யும்.ஊவா மாகாணத்திலும், அம்பாறை , மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு ,தெற்கு மாகாணங்கள்,திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு சுமார் (30-40) கி.மீ வேகத்தில் ஓரளவு பலமான காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் வீசும் பலமான காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

