Saturday, May 23, 2026 2:32 am
சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இளம்பெண் ஒருவர் சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்பை சேர்ந்தவர்களுடன் நுழைந்து தன்னை 8 வருடங்களாக காதலித்து வந்த மணமகன் தன்னை ஏமாற்றிவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்கிறார் எனக்கூறி ஆர்ப்பாட்டம் செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலனாது.
அப்போது அங்கு வந்த ராயபுரம் பொலிஸ் ஆய்வாளர் சிதம்பரம் மகளிர் அமைப்பு சேர்ந்த ஒரு பெண்ணை ஒருமையில் பேசினார். அதோடு, சமூக ஆர்வலரை முகத்தில் குத்தினார். இது தொடர்பான வீடியோ ஏற்கனவே வெளியாகி வைரலானது. அதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக கேள்வி எழுப்பிய தவெக எம்.எல்.ஏ.விடமும் ஆய்வாளர் சிதம்பரம் மோதல் போக்கை கடைபிடித்தார்.
இதையடுத்து ராயபுரம் ஆய்வாளர் சிதம்பரம் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் ஆய்வாளர் சிதம்பரத்தை தமிழக அரசு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளனர். சென்னை பொலிஸ் ஆணையர் அமல்ராஜ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

