Thursday, May 21, 2026 4:59 pm
முதல்வர் சி ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இன்று 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். அதில் 3 பேர் பெண்கள். இருவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
ஏற்கனவே ஒரு பெண் அமைச்சர் (கீர்த்தனா) இருக்கிறார். இந்த நிலையில் இன்று பதவியேற்கும் 3 பெண்களையும் சேர்த்து மொத்தம் 4 பெண் அமைச்சர்கள் விஜய் அமைச்சரவையில் இடம் பெறுகிறார்கள். அதிக அளவிலான பெண்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்த பெருமையும் முதல்வர் விஜய்க்குப் போகிறது.
ஸ்ரீநாத் (தூத்துக்குடி), கமலி (அவிநாசி), சி. விஜயலட்சுமி (குமாரபாளையம்), ஆர்.வி. ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம்), வினோத் (கும்பகோணம்), ராஜீவ் (திருவாடானை), ராஜ்குமார் (கடலூர்), வி.காந்திராஜ் (அரக்கோணம்), மதன்ராஜா (ஒட்டப்பிடாரம்), ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்), ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு), லோகேஷ் தமிழ்ச்செல்வன் (ராசிபுரம்), விஜய் தமிழன் பார்த்தின் (சேலம் தெற்கு), ரமேஷ் (ஸ்ரீரங்கம்), பி.விஸ்வநாதன் (மேலூர்), ஆர் குமார் (வேளச்சேரி), கே. தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்), வி.சம்பத்குமார் (கோவை வடக்கு), முகம்மது பர்வாஸ் (அறந்தாங்கி), சரத்குமார் (தாம்பரம்), மரிய வில்சன் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்), கே. விக்னேஷ் (கிணத்துக்கடவு). இதில் பி.விஸ்வநாதன், ராஜேஷ்குமார் ஆகியோர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் .
சென்னை மாவட்டத்திற்கு மட்டும் மொத்தமாக 7 அமைச்சர்களைக் கொடுத்துள்ளார் முதல்வர் விஜய். இதுவரை இந்த அளவுக்கு அதிக அமைச்சர்கள் சென்னைக்குக் கிடைத்ததில்லை.
அதேபோல தவெக சார்பில் மட்டும் 6 பட்டியலின அமைச்சர்கள் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

