Wednesday, May 20, 2026 4:42 pm
பீய்ஜிங்கில் புதன்கிழமை நடைபெற்ற உச்சிமாநாட்டுப் பேச்சுவார்த்தையில், சீனா ,ரஷ்யத் தலைவர்கள் தங்கள் மூலோபாய உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத் வலியுறுத்தினர். மாஸ்கோ வலுவான எரிசக்தி இணைப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் மாபெரும் மண்டபத்தில், சீன ரஷ்யக் கொடிகளை சிறுவர்கள் அசைக்க, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை மரியாதை அணிவகுப்பு துப்பாக்கிக் குண்டு மரியாதையுடன் வரவேற்றார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து நடைபெற்றுள்ள இந்த உச்சிமாநாட்டின் தோற்றமும் விளைவுகளும் கூர்ந்து ஆராயப்பட்டு ஒப்பிடப்படும்.
சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவாவின் எழுத்துப்படிவத்தின்படி, இரு நாடுகளும் நீண்டகால உத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், “மேலும் நீதியான மற்றும் நியாயமான” உலகளாவிய ஆளுகை முறையை ஊக்குவிக்க வேண்டும் என்றும் ஷி கூறினார்.
“சீனா-ரஷ்ய உறவுகள் இந்த நிலையை எட்டியதற்குக் காரணம், நாம் அரசியல் பரஸ்பர நம்பிக்கையையும் மூலோபாய ஒத்துழைப்பையும் ஆழப்படுத்த முடிந்ததுதான்,” என்று புதினுடனான தனது சந்திப்பின் தொடக்கத்தில் ஷி கூறினார். புதின், தங்கள் உறவுகள் உலகளாவிய ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த உதவுவதாகவும், மத்திய கிழக்கு சீர்குலைவுகளுக்கு மத்தியில் ரஷ்யா ஒரு நம்பகமான எரிசக்தி வழங்குநராகத் தொடர்கிறது என்றும் வலியுறுத்தினார்.

