Wednesday, May 20, 2026 11:03 am
இந்திய மீனவர்கள் எமது கடல் வளத்தை சுரண்டாமல் தமிழக முதல்வர் யோசப் விஜய் பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சம்மேளனத் தலைவர் அந்தோணி பிள்ளை மாறியதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சம்மேளனங்களின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற போதே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து சம்மேளனத் தலைவர் தெரிவிக்கையில் தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு மீனவர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவரிடம் வினையமாக சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறோம்.
தமிழ்நாட்டில் இருந்து எல்லை தாண்டும் இந்திய மீனவர்களால் இலங்கை வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எமது கடல் வளத்தை அழிப்பதோடு எமது மீனவர்களின் பல கோடி பெருமதியான பெறுமதியான வலைகளையும் நாசம் செய்து விட்டார்கள்.
தற்போது மீன்பிடி தடைக்காலம் இடம்பெற்று கொண்டிருக்கின்ற நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் தடைகாலம் நிறைவடைவதாக அறிகிறோம்.
ஆகவே எமது கடற் பகுதிக்குள் அத்துமீறி உள்நுளையும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .
அதுமட்டுமன்றி கச்சதீவு உட்பட வடக்கு கிழக்கை தமிழ்நாட்டிற்கு வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவிக்கும் கருத்துக்களை சம்மேளனத் தலைவர் அந்தோணி பிள்ளை மாறியதாஸ் கடுமையாக மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

