Tuesday, April 28, 2026 2:37 pm
கடமை நேரத்தில் ஒழுக்க விதிகளை மீறி, இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து நடத்துநருடன் முரண்பட்டு கொண்ட தனியார் பேருந்து நடத்துநருக்கு மறுஅறிவித்தல் வரை பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தின் போது, கடமையிலிருந்த குறித்த தனியார் பேருந்து நடத்துநர், இ.போ.ச. பேருந்து நடத்துநரை நோக்கித் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி அநாகரிகமான முறையில் நடந்துகொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான காணொலி ஆதாரங்கள் அதிகார சபையின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

