Monday, February 16, 2026 2:57 pm
2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது.
3545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சையில் கலந்து கொள்கின்றனர் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் பிப்ரவரி 26 வரை பரீட்சை நடைபெறும். பரீட்சை நடைபெறும் பரீட்சார்த்திகள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தங்கள் மத்திய நிலையங்களில் இருப்பது அவசியமாகும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறும் அவர் பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டை விட இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது நாட்களுக்கான பாடங்களின் வரிசை முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் சரியான நேர அட்டவணையை மாத்திரம் பயன்படுத்துமாறு குறிப்பிட்டார்.
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் உள்ள நேர அட்டவணையை மாத்திரம் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

