Friday, January 23, 2026 9:31 pm
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக இந்திய கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து சிறப்பு மருத்துவர்கள் குழு இன்று (23) இலங்கை வந்துள்ளது.
சுற்றுலா துணை அமைச்சர் ருவான் ரணசிங்கவின் அழைப்பின் பேரில் வந்த மருத்துவக்குழு நடத்தும் மருத்துவ கிளினிக்குகள் ஜனவரி 24 , 25 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளன, இவர்களுடன் உள்ளூர் மருத்துவர்கள் உட்பட 25 பணியாளர்கள் பங்கேற்கின்றனர்.
சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E 1179 மூலம் இந்தக் குழு இன்று மாலை 4.15 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

