Thursday, January 22, 2026 8:48 pm
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பகை உள்ளது. இந்நிலையில் தான் ஈரானை நோக்கி அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பல் செல்லும் நிலையில் போர் விமானங்கள் குவிக்கப்பட்டு வருகிறது. அதோடு, மத்திய கிழக்கில் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை அமெரிக்கா பலப்படுத்தி உள்ளது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலுக்கு தயாராகி உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரானில் தற்போது உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்துக்கு இஸ்ரேலும், அமெரிக்காவும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரானில் தற்போது வரை பல்லாயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தற்போது நடக்கும் போராட்டத்துக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தான் காரணம் என்று அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அமெரிக்க பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அதில், ‛‛ அமெரிக்காவின் மத்திய கமாண்ட் சென்டர் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஆபரேஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்போது F-15E ஈகிள் போர் விமானங்கள் மற்றும் USS ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் உள்ளிட்டவற்றை ஈரான் அருகே கொண்டு சென்றுள்ளது. அதுமட்டுமின்றி மத்திய கிழக்கில் தனது வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளையும் அமெரிக்கா பலப்படுத்தி உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.