Monday, January 19, 2026 8:24 pm
பல வருடங்களாகவே ஒன்றாக செயல்பட்டு வந்த மருத்துவர் ராமதாஸ், அவருடைய மகன் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையேயான உறவு தற்போது சரியாக இல்லை. தந்தைக்கு எதிராக தனியாக செயல்பட துவங்கிவிட்டார் அன்புமணி. எனவே அன்புமணி பற்றிய பல பகிர் புகார்களை ராமதாஸ் பல இடங்களில் தொடர்ந்து சொல்லி வருகிறார். ‘அவனை நான் பெற்றதே தவறு. அவனை மத்திய அமைச்சராக்கியது நான் செய்த இரண்டாவது தவறு.. அன்புமணியின் பதவிக்காலம் எப்போது முடிந்துவிட்டது.. பாமகவிற்கு நான் தான் தலைவர்’ என்று சொல்லி வருகிறார் டாக்டர் ராமதாஸ்.
தற்போது அன்புமணி தலைமையிலான பாமக, ராமதாஸ் தலைமையிலான பாமக என இரண்டு பிரிவுகள் பாமகவில் செயல்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் ராமதாஸ்- அன்புமணி இடையேயான மோதல் அந்த கட்சியின் நிர்வாகிகளிடமும், அந்த கட்சிக்கு வாக்களிப்பவர்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருபக்கம் சமீபத்தில் அன்புமணி எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைந்தார். ஆனால் ‘அந்த முடிவை அன்புமணி எடுக்க முடியாது. நான் தான் கூட்டணி பற்றி முடிவு செய்வேன்’ என ராமதாஸ் கூறியிருந்தார்.
எப்படியாவது மகனையும் தந்தையும் ஒன்று சேர்த்து கூட்டணியில் சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வோம் என்கிற நம்பிக்கையில் அதிமுகவும், பாஜகவும் இருந்தன. இந்நிலையில்தான் பாமக தனக்கே சொந்தம் என உயர் நீதிமன்றத்தை நாடியிருருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். இது கூட்டணி கட்சிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

