Monday, January 19, 2026 8:20 pm
கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஏற்கனவே தவெக தலைவர் விஜய் கடந்த 13ம் திகதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போதும் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதன் பின்னர் இரண்டாவது நாளாக இன்றும் அவர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நடந்த விசாரணையில் கலந்து கொண்டார். அப்போது சிபிஐ அதிகாரிகள் பல முக்கிய கேள்விகளை அவற்றும் எழுப்புகிறார்கள்.
கரூர் பிரச்சாரக் கூட்டத்திற்கு சொன்னதை விட ஏழு மணி நேரம் தாமதமாக வர என்ன காரணம்?. கூட்ட நெரிசல் ஏற்பட்ட போதும் பிரச்சாரத்தை தொடர்ந்தது ஏன்?.. கூட்ட நெரிசல் ஏற்பட்டதை உணர்ந்தீர்களா? இல்லையா?.
உணர்ந்தீர்கள் என்றால் எப்போது உணர்ந்தீர்கள்? எப்போது பேச்சை முடித்தீர்கள்? எப்போது சம்பவ இடத்திலிருந்து கிளம்பி சென்றீர்கள்?.
பிரச்சார வானின் மீது நின்று பார்த்திருந்தால் கூட்ட நெரிசலை கவனித்திருக்க முடியுமே!. கட்டுக்கடங்காத அளவிற்கு கூட்டம் வந்தது நீங்களும் கவனிக்கவில்லையா?.. ஒரு பிரபலமான நடிகருக்கு எவ்வளவு கூட்டம் வரும் என உங்களுக்கு தெரியாதா?.
என பல கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் எழுப்பியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் விஜய் சொன்ன பதிலை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அதோடு, தேவைப்பட்டால் மற்றொரு நாளும் விஜயை நேரில் வரவழைத்து அவர்கள் விசாரணை செய்வார்கள் என தெரிகிறது.வருகிற பிப்ரவரி மாதம் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் நீதிமன்றத்தில் இது தொடர்பான அறிக்கையை சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்யவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தே கால் மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பின்னர் விஜய் அங்கிருந்து வெளியே வந்தார். வெளியே வந்தவர் நுழைவாயிலில் பெரும் திரளாக செய்தியாளர்களும், தவெக தொண்டர்களும் காத்திருந்ததைப் பார்த்து காரை விட்டு இறங்கி அவர்களைப் பார்த்து கையைத்தார். புன்னகையுடன் அவரது முகம் காணப்பட்டது. கடந்த முறை அவர் இதுபோல செய்யவில்லை. இந்த முறை புன்னகையுடன் காரிலிருந்து இறங்கி கையசைத்து விட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

