Saturday, January 17, 2026 8:36 pm
,டென்மார்க்கின் கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க ட்ரம்ப் விரும்புவதற்கு கிரீன்லாந்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மாபெரும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கிரீன்லாந்து அமெரிக்காவுடன் ஒப்படைக்க தடையாக இருக்கும் நாடுகள் மீது, வர்த்தக வரிகளை விதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தார்.
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து, அமெரிக்காவுக்கு தேவை என்றும், அவசியம் ஏற்பட்டால் ராணுவ பலத்தை பயன்படுத்தி கிரீன்லாந்தை இணைக்க தயங்க மாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
ட்ரம்பின் கருத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. கிரீன்லாந்து மக்கள் தொகையில் 85 சதவீதம் பேர், அமெரிக்காவுடன் இணைவதை கடுமையாக எதிர்க்கின்றனர். கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்ற முழக்கத்துடன், மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள சிட்டி ஹால் சதுக்கத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். பின்னர் அங்கிருந்து அமெரிக்க தூதரகம் நோக்கி பேரணி சென்றனர். அவர்கள் ட்ரம்புக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.
ட்ரம்பின் மிரட்டலைத் தொடர்ந்து, டென்மார்க்குக்கு ஆதரவாக பிரான்ஸ், ஜேர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து ,நோர்வே போன்ற நாடுகளில் விரைவில் கிரீன்லாந்துக்கு தங்கள் இராணுவ பிரிவுகளை அனுப்ப உள்ளனர்.

