Friday, January 16, 2026 4:24 pm
கார்,பைக் ரேஸ் என சுற்றித்திரியும் அஜித் தனது பட புரமோஒசன்களில் தலையைக் காட்டுவதில்லை. விளம்பரம் இல்லை”, “புரமோஷன் இல்லை” என்று கண்டிப்பாக இருந்த அஜித், திடீரென ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘கேம்பா எனர்ஜி’ (Campa Energy) எனர்ஜி டிரிங் விளம்பரத்தில் நடித்தது தான் இப்போ பெரிய சர்ச்சையாக மாறி இருக்கிறது. அஜித் அந்த பானத்தை அருந்துவது போல வெளியான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவ, அதைவிட வேகமாக விமர்சனங்களும் குவிந்தன.
வழக்கமாக அஜித்தை யாராவது கிண்டல் செய்தால், உடனே அரணாக நின்று பாதுகாக்கும் அவரது ரசிகர்களே இப்போது “இது தப்பு தான்” என்று வெளிப்படையாக பேச ஆரம்பித்திருப்பது தான் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இதற்கு இன்னொரு பக்கம் விளக்கம் சொல்லும் ரசிகர்களும் இருக்கிறார்கள். அஜித்துக்கு சிறுவயதிலிருந்தே பைக், கார் ரேசிங் மீது தீராத ஆர்வம். அந்த ஆர்வத்தின் விளைவாக தான் ‘Ajith Kumar Racing’ என்ற அணியை தொடங்கி, இதுவரை சினிமாவில் சம்பாதித்த பெரும்பாலான பணத்தையும் அதில் முதலீடு செய்துள்ளார். You May Also Like “பாஸ்மதி அரிசி – தேயிலை இனி கிடைக்காது.. ஈரான் மக்களை தண்டித்த டிரம்ப்.. நம் நாட்டுக்கு புது சிக்கல்” இந்த அணியில் வெளிநாட்டு வீரர்களும் இருப்பதால், சர்வதேச போட்டிகள், தொழில்நுட்ப வசதிகள் என மிகப் பெரிய செலவுகள் தேவைப்படுகிறது. அதனால் தான் ஸ்பான்சர்ஷிப்புக்காக இந்த ‘கேம்பா எனர்ஜி’ விளம்பரத்தில் நடித்துள்ளார் என்றும், அதற்காக பெரிய தொகை பெற்றுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

