Friday, January 16, 2026 12:53 pm
ஈரானில் உள்ள இந்தியர்களை அழைத்து வரும் சிறப்பு விமானம் இன்று வெள்ளிக்கிழமை இயக்கப்படுகிறது.
ஈரானில் இடம்பெறும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து ஈரானில் உள்ள இந்தியா்கள் அங்கிருந்து முடிந்த அளவுக்கு விரைவாக வெளியேற வேண்டுமென இந்திய மத்திய அரசு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அங்குள்ள இந்தியர்களுக்காக சிறப்பு விமானம் இன்று இயக்கப்படுகிறது.
இந்தத்திட்டத்தின் முதல்கட்டமாக ஈரானிலுள்ள இந்திய மாணவர்களை அழைத்து வர கடும் சவாலுக்கு மத்தியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெஹ்ரானிலுள்ள இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானில் மாணவர்கள் உட்பட சுமார் 10,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரானில் இணையதளம் முடக்கம் உட்பட தொலைத்தொடர்பு வசதிகள் நிறுத்தப்பட்டிருப்பதால் இந்தியர்களைத் தொடர்புகொண்டு அழைத்து வருவதற்கான பணிகளை மேற்கொள்வதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

