Thursday, January 15, 2026 7:04 am
சரியான நேரத்தில் முறையான கட்டண திருத்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை சமர்ப்பிக்கத் தவறியதைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின்சார கட்டணங்கள் மாறாமல் இருக்கும் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் 29, ஆம் திகதி இலங்கை மின்சாரசபை சமர்ப்பிப்பில் பிழைகள் இருப்பதாகவும், பின்னர் மேலும் தாமதங்கள் எதிர்பார்க்கப்படுவதாக ஜனவரி 8,ஆம் அதிஅதி ஆணையத்திற்குத் தெரிவித்ததாகவும் PUCSL தெரிவித்துள்ளது. காலாண்டின் ஒரு குறுகிய பகுதிக்கு மட்டுமே கட்டண திருத்தத்தை செயல்படுத்துவது விகிதாச்சாரமற்ற முறையில் அதிக அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்றும், தேசிய பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி-மார்ச் 2026 காலகட்டத்திற்கான முன்மொழிவை நவம்பர் 14, 2025க்குள் சமர்ப்பிக்குமாறு ஆணையம் முதலில் CEB-யிடம் கோரியிருந்தது. முறையான மதிப்பாய்வு மற்றும் பொது ஆலோசனைக்குப் பிறகு, முதல் காலாண்டின் மீதமுள்ள காலத்திற்கு திருத்தத்தை PUCSL இன்னும் பரிசீலிக்கலாம் என்றாலும், தற்போது எந்த மாற்றங்களும் பயன்படுத்தப்படாது என்று முடிவு செய்துள்ளது.
சரியான நேரத்தில் பரிசீலிப்பதை உறுதி செய்வதற்காக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை பெப்ரவரி 13, ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு PUCSL CEB-க்கு உத்தரவிட்டுள்ளது.

