Wednesday, January 14, 2026 1:01 pm
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பராசக்தி பட நடிகர்களான சிவகார்த்திகேயன், ரவி மோகன் கலந்து கொண்டனர். அந்த போட்டோ இணையத்தில் வெளியாகி பேசு பொருளாகி உள்ளது.
மறைந்த திமுக தலைவர்கள் அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்கள் மாணவர்களின் இந்திய எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிக்கும் காட்சிகளும் படத்தில இடம்பெற்றுள்ளன. இதனால், பராசக்தி படம் திமுகவை ஆதரிக்கும் படமாக இருப்பதாக இணையத்தில் பலவிதமான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், மத்திய இணையமைச்சர் எல் முருகன் இல்ல பொங்கல் விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், பாடகி கெனிஷா ஆகியோர் பங்கேற்று உள்ளனர். பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் பராசக்தி பட நடிகர் கலந்து கொண்டது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலா மாஸ்டர், நடிகை மீனா கலந்து கொண்ட சர்ச்சையே இன்னும் அடங்காத நிலையில், இந்த பொங்கல் பண்டிகைக்கு அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

