Wednesday, January 14, 2026 9:31 am
யாழ்ப்பாணம் தாவடியில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகம் நேற்று நள்ளிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12.50 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் வீடும் கட்டடமும் ஒன்றாக அமைந்துள்ளது. இந் நிலையில் கட்டடத்தின் வாயிலில் இனந்தெரியாத இரண்டு பேரால் பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகக் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

