Wednesday, January 14, 2026 1:03 pm
ஈரான் அர்சாங்கத்துக்கு எதிராகப் போராடுபவர்கலத் தூக்கிலிட்டால் “மிகவும் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்” என்று அனெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு மிச்சிகனில் உள்ள டியர்போர்னில் ஒளிபரப்பான ஒரு பிரத்யேக நெட்வொர்க் நேர்காணலின் போது அவர் மேலும் தெரிவிகிக்கையில்,
இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடந்த ஆர்ப்பாட்டங்களில் “கணிசமான எண்ணிக்கையிலான” மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது எனக்குத் தெரியும் என்றார்.
பேட்டியின் போது, ஈரானிய குடிமக்களுக்கு “நிறைய உதவிகள் கிடைக்க வழி உள்ளது” என்று ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தினார், அது பொருளாதார உதவி உட்பட “வெவ்வேறு வடிவங்களில்” வழங்கப்படுவதாகக் கூறினார். கடந்த ஆண்டு ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களைப் பற்றி அவர் குறிப்பிட்டார், ஆனால் வேறு எந்த விவரத்தையும் வழங்கவில்லை.
ஈரானில் உங்கள் இறுதி இலக்கு என்ன என்று கேட்டபோது, : “வெற்றி பெறுவதே இறுதி இலக்கு. எனக்கு வெற்றி பெறுவது பிடிக்கும்” என்றார் ட்ரம்ப்.

