Tuesday, January 13, 2026 8:08 pm
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர தொடக்க வீரர் ஷிகர் தவான், தனது இரண்டாவது திருமணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். 2023-ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜியுடன் ஏற்பட்ட விவாகரத்திற்கு பிறகு, தற்போது தனது காதலி சோபி ஷைனுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனத்தின் துணை தலைவராகப் பணியாற்றும் சோபி ஷைனுக்கும், தவானுக்கும் இடையே துபாயில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரின் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக தவான் விளையாடிய போது, சோபி மைதானத்திற்கு நேரில் வந்து தனது ஆதரவை தெரிவித்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.
நெருங்கிய வட்டாரங்களின்படி, இவர்களது திருமணம் வரும் பெப்ரவரி மாதம் கோலாகலமாக நடைபெறவுள்ளது. தனது புதிய வாழ்க்கை குறித்து தவான் சமூக வலைதளங்களில் அறிவித்ததை தொடர்ந்து, சக வீரர்கள், ரசிகர்கள் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

