Tuesday, January 13, 2026 7:46 pm
ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.. இந்த போராட்டம் தற்போது வன்முறையாக மாறியிருக்கிறது. இதில் 646 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள்.. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த சூழலில்தான் ஆர்மீனியா, துருக்கி வழியாக ஈரானில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசு அறிவித்திருக்கிறது.. இது குறித்து அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஈரான் முழுவதும் போராட்டமாக இருக்கிறது.. இதனால் வன்முறையும். காயமும் ஏற்படும். பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக சாலைகள் மூடப்படுகிறது. பொது போக்குவரத்து இடையூறு, இணையதடைகள் நடைபெற்று வருகிறது.
ஈரான் அரசு மொபைல், லேண்ட்லைன் ,தேசிய இணைய நெட்வொர்க்களையும் கட்டுப்படுத்திவிட்டது. ஈரானிலிருந்து செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. எனவே, அமெரிக்கர்கள் உடனடியாக ஆர்மினியா, துருக்கி வழியாக ஈரானை விட்டு வெளியேற வேண்டும்’ என அதில், தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முறுகல் ஏற்பட்டிருக்கும் நிலையில் அங்கு இருக்கும் அமெரிக்கர்களை வெளியேற சொல்லுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டதால் ஈரான் மீது அமெரிக்க தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கிறதா என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

