Tuesday, January 13, 2026 7:17 pm
பண்டிகையை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கான பண்டிகை முன்பணத்தை ரூ.10,000 லிருந்து ரூ.15,000 ஆக அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
இந்த முன்பணத்தை தைப்பொங்கல், ரமலான், சிங்கள ,இந்து புத்தாண்டு, வெசாக், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கும், ஸ்ரீ பாதம் , ஹஜ் போன்ற புனித யாத்திரைகளுக்கும் பயன்படுத்தலாம்.
பொது நிர்வாக அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை வழிமுறைகளைப் பின்பற்றி, எட்டு மாதங்கள் அல்லது அதற்கு முந்தைய காலத்திற்கு வட்டி இல்லாமல் திருப்பிச் செலுத்துதலாம்.

