Tuesday, January 13, 2026 12:31 pm
2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையிலான முதல் எட்டு நாட்களில் மட்டும் 67,762 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
ஜனவரி 6 ஆம் திகதி ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 9275 பயணிகள் வருகை தந்து சாதனை படைத்துள்ளனர்.
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
இந்தியாவிலிருந்து 11,367 பயணிகள் வருகை தந்துள்ளனர். ரஷ்யாவிலிருந்து 8,425 பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 6,067 பயணிகளும் வருகை தந்துள்ளனர். ஜெர்மனியிலிருந்து 5,306 பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

