Tuesday, January 13, 2026 12:15 pm
அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி அலிசா ஹீலி, இந்தியாவுக்கு எதிராக அடுத்துவரும் தொடருக்குப் பின்னர் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
35 வயதான அலிசா ஹீலி அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டங்களை இதுவரை பெற்றுள்ளார்.
மேலும், அலிசா ஹீலி தலைமையிலான அவுஸ்திரேலிய அணி இரண்டு தடவைகள் உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்டதுடன், ஆறு தடவைகள் இருபதுக்கு 20 கிண்ணத்தையும் வென்றுள்ளது.

