Sunday, January 11, 2026 1:54 pm
மத்திய மாகாணத்திற்கும் ஊவா மாகாணத்திற்கும் இடையிலான ஒரு முக்கிய நில இணைப்பை மீட்டெடுக்கும் வகையில், கண்டி-ராகலா சாலையில் உள்ள B-492 நெடுஞ்சாலையில் இந்திய இராணுவத்தின் 19வது பொறியாளர் படைப்பிரிவால் அமைக்கப்பட்ட பெய்லி பாலம் கடந்த 10 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
கண்டி-ராகலா சாலையில் உள்ள B-492 நெடுஞ்சாலையில் உள்ள 100 அடி பெய்லி பாலத்தை இலங்கையில் இந்தியாவின் உயர்மட்ட இராஜதந்திர பிரதிநிதி சந்தோஷ் ஜா, போக்குவரத்து துணை அமைச்சர் டாக்டர் பிரசன்ன குணசேன ,கல்வி மற்றும் உயர்கல்வி துணை அமைச்சர் மதுரா செனவிரத்னே ஆகியோருடன் இணைந்து திறந்து வைத்தார்.
இந்தப் பாலம் பயணிகள் நடமாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் ,பிராந்தியத்தில் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளுக்கு முக்கியமான அத்தியாவசிய போக்குவரத்து வழித்தடத்தை மீண்டும் நிறுவியுள்ளது. புதிதாக இயக்கப்பட்ட பெய்லி பாலம், பாதிக்கப்பட்ட பகுதியில், குறிப்பாக கடினமான மலைப்பாங்கான நிலப்பரப்பில் உள்ள சமூகங்களுக்கான அணுகல் மற்றும் இயக்கத்தை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. இந்த மறுசீரமைப்பு முயற்சிகள் இலங்கை இராணுவம் மற்றும் சாலை மேம்பாட்டு ஆணையத்துடன் (RDA) நெருக்கமான ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்படுகின்றன.


