Sunday, January 11, 2026 9:01 am
நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மூன்றாவது வாரத்தில் நுழையும் வேளையில், ஈரானிய போராட்டக்காரர்களுக்கு உதவ அமெரிக்கா ‘தயாராக உள்ளது’ என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஈரானின் 31 மாகாணங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்வதால், அதிகாரிகள் தகவல் தொடர்புகளை முடக்கியுள்ளனர், அதே நேரத்தில் அரசு ஊடகங்கள் போராட்டங்களுக்கு அமெரிக்கா , இஸ்ரேல் ஆகியவற்றின் “பயங்கரவாத முகவர்கள்” காரணம் என்று குற்றம் சாட்டுகின்றன.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி நிறுவனத்தின்படி, 1979 புரட்சிக்குப் பிறகு நாட்டில் காணப்பட்ட மிகப்பெரிய போராட்டங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 லிருந்து 65 ஆக உயர்ந்துள்ளது.
ஈரானிய போராட்டக்காரர்களுக்கு வாஷிங்டன் “உதவ தயாராக உள்ளது” என்று சனிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ட் ரம்ப் கூறினார். அதே நேரத்தில் ஈரான் ஆட்சியை நீண்டகாலமாக விமர்சிக்கும் குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம், ஈரானிய மக்களின் “நீண்ட கனவு விரைவில் முடிவுக்கு வருகிறது” என்று கூறினார்.

