Sunday, January 11, 2026 8:49 am
சிரியாவில் இஸ்லாமிய அரசு போராளிக் குழுவை குறிவைத்து அமெரிக்க இராணுவம் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.அமெரிக்க மத்திய கட்டளையின்படி, கிழக்கு நேரப்படி மதியம் 12.30 மணியளவில் (இங்கிலாந்தில் மாலை 5.30 மணி) பெரிய அளவிலான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
கடந்த ஆண்டு “டிசம்பர் 13 ஆம் திகதி சிரியாவின் பால்மைராவில் அமெரிக்க, சிரியப் படைகள் ஆகியவற்றி மீது மீது ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய கொடிய தாக்குதலுக்கு நேரடி பதிலடியாக” டொனால்ட் டிரம்ப் அங்கீகரித்த ஆபரேஷன் ஹாக்கி தாக்குதலின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருந்ததாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தாக்குதல்களுக்கு “பதிலடி கொடுப்பதாக” அமெரிக்க ஜனாதிபதி முன்னதாக சபதம் செய்தார்.

