Saturday, January 10, 2026 8:56 pm
இந்தியா அமெரிக்காவுடன் நல்ல நட்புடன் பழகி வந்தது. அதேநேரம் அமெரிக்காவுக்கு பிடிக்காத ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்து வருகிறது. நாட்டாமை மனநிலையில் இருக்கும் அமெரிக்காவுக்கு இது பிடிக்கவில்லை. எனவே ரஷ்யாவுடன் தொழில்வர்த்தகம் செய்வதை இந்திய நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து சொல்லி வருகிறார்.
ஆனால் அவர் சொல்வதை இந்தியா கேட்கவில்லை. அதேநேரம், ட்ரம்பின் மிரட்டுலுக்கு பிரதமர் மோடியும் எந்தவித எதிர்வினையும் ஆற்றவில்லை. பிரதமர் மட்டுமல்ல.. மத்திய அமைச்சர்கள் கூட இதுபற்றி கருத்து தெரிவிக்காமால் மௌனம் காத்து வருகிறார்கள்.
இந்நிலையில்தான் டொனால்ட் ட்ரம்பின் தொலைபேசி அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து தவிர்த்து வருவதால் அமெரிக்க-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் தடைப்பட்டு இருக்கிறது என அமெரிக்கா வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா மீது அதிக வரியை விதிப்பதால் ஏற்பட்ட கோபத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடி டொனால்ட் ட்ரம்பிடம் பேசாமல் தவிர்த்து வருகிறார் என பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது.

