Saturday, January 10, 2026 8:52 pm
பொதுவாக வியாபாரத்தின் அடிப்படையில் ஒரு நிறுவனத்திடம் பொருட்கள் வாங்குவது தொடர்பாக பதிந்தால் போட்டால் ஓரிரு நாட்களில் வந்து விடும். ஆனால் லிபியாவில் ஒரு செல்போன் வியாபாரி 16 வருடங்களுக்கு முன்பு பதிந்த செல்போன்கள் தற்போது விநியோகம் ஆன சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது
2010 காலகட்டங்களில் பலவகைகள் இருந்தன.. இந்நிலையில், லிபியாவை சேர்ந்த ஒருவர் செல்போன் வியாபாரம் செய்து வந்திருக்கிறார்.. அவர் ஒரு நிறுவனத்தில் நிறைய நோக்கியோ செல்போன்களை ஆர்டர் போட்டிருக்கிறார்.
ஆனால் அப்போது லிபாயாவில் உள்நாட்டு போர் துவங்கியதால் அவர் ஆர்டர் செய்த செல்போன்கள் என்ன ஆனது என யாருக்கும் தெரியவில்லை.. ஆர்டர் செய்தவரும் அதை மறந்து விட்டார்
. ஆனால் அந்த செல்போன்கள் வார் ரூமில் வைக்கப்பட்டிருந்து தற்போது அதை அந்த நபருக்கு டெலிவரி செய்துள்ளனர். அதை ஓபன் செய்து பார்த்து அந்த நபர் ‘இது போன்களா? இல்லை தொல்லியல் பொருட்களா? என நக்கலடித்து அவர் அந்த பாக்சை திறக்கும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

