Thursday, January 8, 2026 12:09 pm
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழியின் 58-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் ,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
2026 தேர்தலை முன்னிட்டு திமுகவை “தீயசக்தி” என விஜய் கடுமையாக சாடி வரும் நிலையில், இந்த வாழ்த்து வெறும் ‘அரசியல் நாகரிகமா’ அல்லது இதற்கு பின்னால் ஏதேனும் ‘உள்குத்து’ உள்ளதா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
டெல்லி அரசியலில் செல்வாக்கு மிக்க கனிமொழிக்கு அமித்ஷா வாழ்த்து சொன்னது, வரும் தேர்தலில் பாஜக – திமுக இடையே ஏதேனும் திரைமறைவு புரிதல் ஏற்படுமா என்ற சந்தேகத்தை எதிர்க்கட்சிகள் மத்தியில் உருவாக்கியுள்ளது.
திமுகவை வீழ்த்துவதே இலக்கு என்று கூறும் விஜய்யும், அமித்ஷாவும், கனிமொழிக்கு வாழ்த்து கூறியது ஏதோ சமிக்ஞையை தருவதாகப் பார்க்கப்படுகிறது

