Wednesday, January 7, 2026 5:15 pm
உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ள வேளாங்கண்ணியில், வரும் பெப்ரவரி மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்காக ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் உள்ளது போல, வேளாங்கண்ணியையும், அதன் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுப்புற பகுதிகளையும் வான்வழியாக சுற்றி பார்க்கும் வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இந்த சேவையின் கீழ், சுமார் 25 கிலோமீற்றர் சுற்றளவை வான்வழியாக கண்டு ரசிக்க ஒருவருக்கு ரூ. 6,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பயணத்தில் ஒரே நேரத்தில் 6 பயணிகள் வரை செல்ல முடியும். இது தவிர, அவசர தேவைகளுக்காகவும், பயணிகளின் வசதிக்காகவும் வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்களுக்கு நேரடி ஹெலிகாப்டர் சேவையை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

