Wednesday, December 31, 2025 3:59 pm
சாவகச்சேரியில் குரங்குகளை சுடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இறப்பர் துப்பாக்கிகளை வழங்கியுள்ளார்.
குரங்குகளின் தொல்லையால் பயிர்கள் அழிவடைவதனால் சாவகச்சேரி கமக்காரர்கள் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்தனர்.

முறைப்பாட்டையடுத்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, சாவகச்சேரியில் தென்மராட்சி பிரதேசத்தில் குரங்குகளை சுட்டு கலைப்பதற்காக இறப்பர் துப்பாக்கிகளை 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட நிதியிலிருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பத்து லட்சம் ரூபா பெறுமதியான துப்பாக்கிகளை 20 கமக்காரர்களுக்கு வழங்கினார்.


