Tuesday, December 30, 2025 1:36 pm
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடலில் காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று செவ்வாய்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது.
குறித்த இளைஞன் தாளையடி கடற்கரைக்கு நண்பர்களுடன் நீராடச் சென்ற வேளை கடலோடு இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார்.
காணாமல்போனவரை தேடும் பணி கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் அதே பகுதியில் குறித்த இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த 27 வயதுடைய உதைபந்தாட்ட வீரர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

