Tuesday, December 30, 2025 10:23 am
கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் 131 கிலோ கேரளக் கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தக் கஞ்சா மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

